கதாநாயகி திரிஷா, படத்தில் 6 வில்லன்கள் ! - தொடரும் தளபதி 67 அப்டேட்ஸின் உண்மை நிலவரம்
விஜய்யின் வாரிசு
தமிழ் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. தளபதி விஜய்யை வைத்து சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வாரிசு திரைப்படம் முடியும் முன்பே தளபதி 67 குறித்த அப்டேட்ஸ் தொடர்ந்து இணையத்தில் பரவி வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தில் 6 வில்லன்கள் நடிப்பதாகவும், நடிகை திரிஷா கதாநாயகியாக நடிப்பதாகவும் தகவல் பரவின.

தொடரும் அப்டேட்ஸ்
ஆனால் தற்போது சமுக வலைதளத்தில் இருந்து விலகியுள்ள லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் திரைக்கதை எழுதும் வேலையில் பிஸியாக இருக்கிறாராம். இதனால் அப்படத்தில் நடிக்கும் எந்த ஒரு நடிகர்களையும் முடிவு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அப்படத்தின் ஷூட்டிங் முடிய இன்னும் 40 நாட்கள் இருக்கிறதாம். விஜய் ஒரு படத்தை முடித்த பின் ஒரு மாதம் பிரேக் எடுப்பார்.
எனவே தளபதி 67 திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்க டிசம்பர் மாதம் ஆகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

ஷங்கரின் மகள் அதிதியால் ஏமாற்றத்திற்கு ஆளான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி