தளபதி 67ல் எதிர்பார்த்த கூட்டணி இல்லையா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக்
தளபதி 67
வாரிசு படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 67. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ஏற்கனவே விஜய் - லோகேஷ் கூட்டணி மாஸ்டர் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்துள்ளது. இதனால் தளபதி 67 மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

அதே போல் தளபதி 67 லோக்கி யூனிவெர்சில் இணையுமா என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
எதிர்பார்த்த கூட்டணி இல்லையா
இந்நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அதில் பெரிய ட்விஸ்ட் ஒன்று கிளம்பியுள்ளது. அது என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67 படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப்போவதாக பேசப்பட்டு வருகிறது.

இந்த தகவல் அனிருத் தான் இசையமைக்கப்போகிறார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்று ஷாக் கொடுத்துள்ளது. ஆனால், யுவன் - விஜய் காம்போவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைத்துள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
இதற்கெல்லாம் படக்குழுவிடம் இருந்து வெளிவரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தான் பதில் சொல்ல வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..
அறந்தாங்கி நிஷாவிற்கு மருமகன் பொறந்தாச்சு.. மகிழ்ச்சியில் அவர் வெளியிட்ட புகைப்படம்