தளபதி 67 இந்த சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கா.. எந்த படம் தெரியுமா
தளபதி 67
விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 67. இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் வில்லனாக நடிக்க சஞ்சய் தத் மற்றும் பிரித்விராஜ் கமிட்டாகியுள்ளார்களாம். மேலும் இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். இவர்களுடன் நடிகை திரிஷா தளபதி 67 படத்தின் கதாநாயகியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரீமேக்கா?
இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தளபதி 67 திரைப்படம் ஹாலிவுட்டில் வெளிவந்த 'A History of Violence' படத்தின் ரீமேக் என்று லேட்டஸ்ட் தகவல் ஒன்று உலா வருகிறது.
A History of Violence எனும் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் என்றும், திரைக்கதை பிரமாதமாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..