தளபதி 67 படத்தில் 6 வில்லன்கள்.. வெறித்தனமான சம்பவம் செய்யும் லோகேஷ் கனகராஜ்
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி தளபதி 67 படத்தில் அமையும் என்று பல மாதங்களாக கூறப்பட்டு வருகிறது.
இதுகுறித்து லோகேஷ் கனகராஜிடம் கேட்கும் போதெல்லாம், விரைவில் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகிறார். இதை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் அடுத்த படத்தின் அப்டேட்டுடன் மீண்டும் வருகிறேன் என்று கூறிவிட்டு ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அதன்படி, தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையை விறுவிறுப்புடன் செய்து வருகிறாராம்.
தளபதி 67
இந்நிலையில், தளபதி 67 படத்தில் விஜய்க்கு மொத்தம் 6 வில்லங்கள் என்று கதையை தயார் செய்துள்ளாராம் லோகேஷ். இந்த 6 வில்லன்களில் சஞ்சய் தத், பிரித்விராஜ், என இரு நடிகர்களை தற்போது கமிட் செய்துள்ளதாகவும்.
மேலும், தெலுங்கில் உள்ள முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மற்ற மூன்று வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்று இதுவரை தகவல் வெளிவரவில்லை.