ரஜினிக்காக தயார் செய்த கதையில் நடிகர் விஜய்யா ! தளபதி 67 குறித்த சுவாரஸ்யமான தகவல்..
விஜய்யின் லைன் அப்
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் பீஸ்ட், பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் பிஸியாகி விட்டார், இப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கடந்த சில நாட்களாக தளபதி 67 திரைப்படம் குறித்த தகவல் தான் இணையத்தில் பரபரப்பாக பரவி வருகிறது.
அதன்படி தளபதி 67 படத்தை மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், அப்படத்திற்காக மீண்டும் மாஸ்டர் கூட்டணி இணைவதாகவும் கூறப்பட்டது.
விஜய்க்காக மாற்றப்பட்ட தளபதி 67
இந்நிலையில் தற்போது அப்படம் குறித்த மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆம் லோகேஷ் இயக்கத்தில் கமல் தயாரிக்கவிருந்த படத்தின் கதை தான் தளபதி 67-ஆக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிக்காக தயாரித்த கதையை தற்போது விஜய்க்கு ஏற்றார் போல மாற்றி லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரச்னையை தவிர்க்க லோகேஷ் கனகராஜ் செய்த விஷயம்! விக்ரம் கதை அப்டேட்