மாஸ்டர் போல தளபதி 67 படக்குழு செய்யவுள்ள விஷயம் ! என்ன தெரியுமா?
தளபதி 67 படத்தின் பூஜை
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் நடிகர்கள் குறித்த விவரங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
இதனிடையே விஜய்யின் 66-வது பட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இப்போதே தளபதி 67 திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளார், அப்படம் விஜய்யின் 67-வது திரைப்படமாக உருவாகவுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது.
லலித் தயாரிக்கும் அப்படத்தின் பூஜை அக்டோபர் 3 போடப்பட்டு அன்றிலிருந்து ஷூடிட்ங் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நாளில் தான் மாஸ்டர் திரைப்படமும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரசிகர் ! அவருக்காக நடிகர் சூர்யா செய்த விஷயம்..