தளபதி 67 படத்தின் மூன்றாவது வில்லன்.. இதுவரை எந்த ஒரு விஜய்யின் படத்திலும் நடக்காத விஷயம்

Report

விஜய் - லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி 67 படத்தில் மீண்டும் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைகிறது. இதை நடிகர் கார்த்தி உறுதி செய்துள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை திரிஷா நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது. அதே போல், விஜய்க்கு எதிரான வில்லி கதாபாத்திரத்தில் சமந்தா கமிட்டாகியுள்ளதாக தெரியவந்தது.

தளபதி 67 படத்தின் மூன்றாவது வில்லன்.. இதுவரை எந்த ஒரு விஜய்யின் படத்திலும் நடக்காத விஷயம் | Thalapathy 67 Movie Third Villan Reveled

இதை தொடர்ந்து இப்படத்தில் மொத்தம் 6 வில்லன்கள் என்றும், அதில் சஞ்சய் தத் மற்றும் பிரித்விராஜ் இதுவரை தேர்வாகியுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

மூன்றவது வில்லன் நடிகர்

இந்நிலையில், மூன்றாவது வில்லனாக பிரபல நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். ஏரக்குறைய உறுதியாகியுள்ளது என்றும் தெரிவிகின்றனர். மேலும், தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் இறுதி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கலாம்.

தளபதி 67 படத்தின் மூன்றாவது வில்லன்.. இதுவரை எந்த ஒரு விஜய்யின் படத்திலும் நடக்காத விஷயம் | Thalapathy 67 Movie Third Villan Reveled

இப்படத்தை அடுத்த வருடம் ஆயுத பூஜைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை எந்த ஒரு விஜய் படத்திலும் சேராத பிரமாண்ட கூட்டணி தளபதி 67 படத்தில் சேரவுள்ளது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்தடுத்து என்னென்ன அப்டேட் வருகிறது என்று..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US