தளபதி 67 திரைப்படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறாரா? வெளியான உறுதியான தகவல்..

By Jeeva Jul 21, 2022 12:40 PM GMT
Report

தளபதி 67 திரைப்படத்தில் சமந்தா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்யுடன் ஏகபட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

மேலும் அப்படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படமாக உருவாகும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் அப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பும் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் செம வைரலாக பரவின. மேலும் அவருடம் தளபதி 67 படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் தற்போது இது குறித்து படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆம், இப்படத்தில் நடிகை சமந்தா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை, அந்த தகவல்கள் உண்மையல்ல என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67 திரைப்படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறாரா? வெளியான உறுதியான தகவல்.. | Thalapathy 67 Samantha

வில்லனாக விஜய், ஹீரோவாக சூர்யா ! 100 நாட்கள் ஒடிய திரைப்படத்தில் அமையவிருந்த மாஸ் கூட்டணி..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US