50 வயது நபராக நடிக்கும் விஜய்.. தளபதி 67 படத்தின் கதை இதுதானா..
தளபதி 67
விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி தளபதி 67ல் அமைந்துள்ளது. இப்படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது. ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த பூஜையில் இருந்து இதுவரை எந்த ஒரு புகைப்படமும் வெளிவரவில்லை.
இந்த சமயத்தில் தளபதி 67 படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே A History of Violence எனும் படத்தின் தழுவல் தான் தளபதி 67 என கூறப்பட்டது.
ஏறக்குறைய அது உறுதியான தகவல் தான் என்றும், அதே சாயலில் தான் தளபதி 67 கதை அமைந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
படத்தின் கதை
இந்நிலையில், தளபதி 67 கதைப்படி 50 வயதான கதாநாயகன் விஜய், தனது மனைவி மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு அசபாவிதம் நடக்கிறது. இதனால் அமைதியாகி வாழ்ந்து வந்த கதாநாயகனின் வாழ்க்கை வன்முறைக்கு எப்படி செல்கிறது என்பதே தளபதி 67 படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை..

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
