தளபதி 67 படத்தின் கதைக்களம் இப்படி தான் இருக்குமா?- வெளிவந்த சுவாரஸ்ய தகவல்
விஜய்யின் படம்
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் படு பிரம்மாண்டமாக நடைபெற்றது, அந்நிகழ்ச்சியில் படம் குறித்து ஏராளமான தகவல்கள் வந்தன.
இப்படத்தின் பட்ஜெட் முதலில் ரூ. 60 கோடி என கணக்கு போட்டுள்ளனர், ஆனால் படம் ரூ. 80 கோடி வரை செலவில் உருவாகியுள்ளதாம்.
படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி தெறி மாஸான வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்த படம்
இப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜுடன் இணைய இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்போது என்னவென்றால் இப்படத்தின் கதைக்களத்தில் விஜய்யின் தாக்கம் எதுவும் இருக்காதாம், அதாவது மாஸ் வசனங்கள், கெத்தான காட்சிகள் என இருக்காதாம்.
முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் படமாக தான் இருக்குமாம்.
பிரபல காமெடி நடிகர் சார்லியின் மகனை பார்த்துள்ளீர்களா?- அழகிய திருமண புகைப்படம்