விஜய்யின் பிளாக் பஸ்டர் படத்தை எடுத்த இடத்தில் தொடங்கும் தளபதி 67 ! வெளியான முக்கிய அப்டேட்..
விஜய்யின் 67-வது திரைப்படம்
விஜய் நடிப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் முற்றலும் மாறுபட்ட ஒரு விஜய்யை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காட்டியிருந்தார்.
இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று வசூலில் பல சாதனைகளையும் படைத்தது. மாஸ்டர் வெற்றிக்குபின் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
தளபதி 67 விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் LCU-வாக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீனிடம் இருக்கும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தளபதி 67 படத்தின் முதற்க்கட்ட படபிடிப்பு மும்பை தொடங்கும் என சொல்லப்படுக்கிறது. கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படம் மும்பை பின்னணியில் உருவாகிராத என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏற்கனவே இதேபோல் மும்பை பின்னணி வெளிவந்த விஜய்யின் துப்பாக்கி திரைப்படம் அவரின் திரைபயணத்தைய மாற்றிய பிரம்மாண்ட வெற்றி திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
