ஹாலிவுட் நடிகரின் பாணியில் தளபதி விஜய்.. தளபதி 67 படத்தில் இப்படியொரு விஷயமா
தளபதி 67
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 67. இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.
இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வாரிசு படத்தின் ரிலீசுக்கு பின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது என்று லோகேஷ் கூறியிருந்தார்.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்நிலையில், இப்படம் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் படங்களின் பாணியில் அமைக்கப்பட உள்ளதாக லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம்.
மேலும் இப்படத்தில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக தளபதி 67 மாபெரும் படைப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் நடிகை சமந்தா- எங்கே தெரியுமா?