விஜய்யின் 68வது படத்தின் ஒளிப்பதிவாளர் இவரா?- செம போங்க
விஜய்
விஜய் நடிப்பில் இந்த வருடம் வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் அந்த படம் சரியாக வரவேற்பு பெறவில்லை.
அப்படத்தை தொடர்ந்து விஜய் இப்போது லோகேஷ் கனகராஜுடன் இணைந்து லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் இப்படத்தின் முதற்பட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து சென்னையில் லியோ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.
படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருந்து விஜய் அவ்வப்போது ரசிகர்களையும் சந்தித்து வருகிறார்.

சூப்பர் அப்டேட்
விஜய் லியோ படத்தை முடித்த கையோடு அடுத்த பட கதை மற்றும் இயக்குனரை தேர்வு செய்துவிட்டார். AGS நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
தற்போது படத்தில் பணிபுரியும் ஒரு தொழில்நுட்ப கலைஞர் குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது விஜய்யின் 68வது படத்தின் ஒளிப்பதிவாளராக Siddhartha Nuni கமிட்டாகி இருப்பதாக தெரிகிறது.

தனது காதல் கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை மகாலட்சுமி- புகைப்படங்கள் இதோ