தளபதி 69 படத்தின் First லுக்.. எப்போது ரிலீஸ் தெரியுமா! லேட்டஸ்ட் அப்டேட்
தளபதி 69
தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில், தனது கடைசி படம் தளபதி 69 என அறிவித்துள்ளார். இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
First லுக் போஸ்டர்
இந்த நிலையில், தளபதி 69 படத்தின் First லுக் போஸ்டர் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, விஜய்யின் கடைசி படமான தளபதி 60 படத்தின் First லுக் போஸ்டரை வருகிற டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
