தளபதி சிவகார்த்திகேயன்.. ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் வைரல்
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்திற்கு பின் இவருடைய மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.
இவர் நடிப்பில் அடுத்ததாக எஸ்.கே 23 மற்றும் பராசக்தி ஆகிய படங்களை உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளிவந்த பராசக்தி படத்தின் டைட்டில் டீசர் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தளபதி விஜய் சினிமாவை விட்டு விலகும் நிலையில், அவருடைய இடத்தை பிடிக்க தகுதியானவர் நடிகர் சிவகார்த்திகேயன் தான் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டது.
ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்
அதற்கு ஏற்றாற்போல், கோட் படத்தில் விஜய் - சிவகார்த்திகேயன் இணைந்து நடித்த காட்சியும் அமைந்துவிட்டது. இதனால் அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தில் இருந்து, ஒட்டியுள்ள போஸ்டரில் சிவகார்த்திகேயனை 'தளபதி' என அடையப்படுத்தியுள்ளனர் ரசிகர்கள். அந்த போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..