துணிவு படத்தின் இடையில் ’தீ தளபதி’ பாட்டு.. அதற்கு அஜித் ரசிகர்கள் செய்த காரியம்
விஜய் - அஜித்
தமிழ் சினிமாவில் விஜய் - அஜித் இருவருக்குமே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர்களின் படம் வெளியானாலே பண்டிகையை போல ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதோடு இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் நடுவில் மோதலும் எல்லைமீறிப்போகும்.
நேற்று விஜய்யின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் நேற்று மாபெரும் கொண்டாட்டங்களுடன் வெளியானது. இந்த இரண்டு படத்திற்கும் மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகிறார்கள்.

அஜித் ரசிகர்கள்
இந்நிலையில் நேற்று காரைக்குடி திரையரங்கில் துணிவு திரைப்படம் வெளியாகும் போது இடைவேளையில் விஜய்யின் ’தீ தளபதி’ பாடலை போட்டுள்ளனர்.
இதை பார்த்த அஜித் ரசிகர்கள் விஜய்யின் பாடலை மாற்ற சொல்லி கூச்சலிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தெரியாமல் நடந்த தவறு என தியேட்டர் விளக்கம் கொடுத்து இருக்கிறது.
Thee thalapathy song played during Thunivu interval,check their reactions ??? pic.twitter.com/L4XhSPiHWb
— Hari Vj Fanatic 2.0 (@Vijayfanzh1) January 11, 2023
தியேட்டர் உள்ளே கொண்டாடிய ரசிகர்கள்.. போலீஸ் வந்து கொடுத்த உச்சகட்ட ஷாக்