எதிர்பார்க்க முடியாத தொகைக்கு விற்பனையான ஜனநாயகன்.. வெளிநாட்டிலும் மாஸ் காட்டும் விஜய்
முன்னணி நடிகர்களின் படம் என்றால் கண்டிப்பாக அப்படத்தின் பிசினஸ் அமோகமாக நடைபெறும். படத்தின் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே, அப்படத்தின் ஒவ்வொரு உரிமைகளும் விற்பனை ஆகிவரும்.

ஜனநாயகன்
அதுவே தளபதி விஜய் படம் என்றால் சொல்லவே தேவையில்லை. அதுவும் அவருடைய கடைசி படம் ஜனநாயகன் பற்றி சொல்லவே வேண்டும். ஆம், ஜனநாயகன் படத்தின் ப்ரீ பிசினஸ் அமோகமாக நடைபெற்று வருகிறது.

OTT உரிமை ரூ. 110 கோடி, தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை ரூ. 115 கோடி மற்றும் ஆடியோ உரிமை ரூ. 35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை ரூ. 260 கோடி பிசினஸ் ஆகியுள்ளது.

வட அமெரிக்கா உரிமை
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் வட அமெரிக்கா உரிமையை ரூ. 24 கோடிக்கு வாங்கியுள்ளனர். இது மிகப்பெரிய சாதனையாகும். இப்படம் $5.75 மில்லியன் (ரூ. 50 கோடி) வசூல் செய்தால் மட்டுமே பிரேக் ஈவன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan