நடிகர் விஜய்யின் உணவு பழக்கம்.. இந்த ஒரு விஷயம் இல்லாமல் சாப்பிட மாட்டாராம்
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இவர், சினிமாவிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார்.
ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என்றும் அவர் அறிவித்துள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜூ, ப்ரியாமணி, கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.
உணவு பழக்கம்
நடிகர் விஜய் குறித்து அவ்வப்போது சில அன்ஸீன் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது தனது உணவு பழக்கம் குறித்து நடிகர் விஜய் பேசும் பழைய வீடியோ ஒன்று ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் தனது உணவு பழக்கம் குறித்து பேசும் விஜய், அசைவ உணவு இல்லாமல் தன்னால் சாப்பிட முடியாது என்று கூறியுள்ளார். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் அசைவம் சாப்பிட கூடாது என சொல்லுவாங்க. அதனால் அந்த நாட்களில் மட்டும் நான் படப்பிடிப்பில் இருக்கும்போது வெளியே சாப்பிடுவேன். அந்த ரூல்ஸ் வீட்டில் மட்டுமே. வெளியே எல்லாம் அந்த ரூல்ஸை பின்பற்ற மாட்டேன் என கூறியுள்ளார்.

சிறுமியின் கனவில் வந்த சிவன்.. கனவை நனவாக்க குடும்பத்தினர் செய்த செயல் - அதிர்ச்சி சம்பவம்! IBC Tamilnadu

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

எனக்கு முன்னாடி 4 பேர்; இந்த வேலைக்கு பேர் என்ன? - நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் பதிலடி IBC Tamilnadu
