மனைவி சங்கீதா, மகன் சஞ்சய், மகள் திவ்யாவுடன் தளபதி விஜய்.. பலரும் பார்த்திராத புகைப்படம்

Kathick
in பிரபலங்கள்Report this article
விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படம் உலகளவில் ரூ. 360 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
அடுத்ததாக ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் படம் குறித்து நேற்று மாலை அதிகாரப்பூரமான அறிவிப்பை வெளியிட்டனர். கே வி என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என குறிப்பிட்டு இருந்தனர்.
விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் தளபதி 69 படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் முதல் துவங்கவுள்ளதாம். மேலும் அடுத்த வருடம் அக்டோபர் மாதத்தில் படம் வெளியாகும் என்றும் அதே போஸ்டரில் அறிவித்துள்ளனர்.
குடும்பத்துடன் விஜய்
நடிகர் விஜய் 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், விஜய் தனது மனைவி, மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..