இளையராஜா பக்கத்தில் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா.. இதோ பாருங்க
இளையராஜா
திரையுலகில் பிரபலமான நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் பிரபல நடிகர் தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் இளையராஜா. இவருடன் ஒரு புகைப்படமாவதுஎடுத்துக்கொள்ள மாட்டோமா என ரசிகர்கள் பலரும் ஏங்கி இருக்கிறார்கள்.
விஜய்
இந்நிலையில், நடிகர் விஜய் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது.
திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தனது தந்தையுடன் இணைந்து இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.