ரூம் போட்டு கொடுத்த தயாரிப்பாளர்.. ரூ. 40 லட்சம் பில் நீட்டிய வாரிசு பிரபலம்
வாரிசு - தமன்
விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். தென்னிந்திய அளவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் தமன்.
இவர் தெலுங்கில் போட்ட பல பாடல்கள் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. இப்படி முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் தமனுக்கு சொந்தமாக ம்யூசிக் ஸ்டூடியோ இல்லையாம்.
இதனால் அவர் பார்க் ஹயாத் ஹோட்டலில் தான் ரூமை வாடகைக்கு எடுத்து அங்கு இசையமைத்து வருகிறாராம். அங்கு அவர் பெயரில் ஏராளமான அறைகள் புக் செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கின்றனர்.
ரூ. 40 லட்சம் பில்
அவர் புக் செய்துள்ள இந்த அறைகளுக்கு வாடகையை தயாரிப்பாளர்கள் தான் கட்டுவார்களாம். அந்த வகையில், சமீபத்தில் தனது ஹோட்டல் பில்லை தயாரிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ளார் தமன். அவர் அனுப்பிய பில்லை பார்த்து தயாரிப்பாளர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாராம்.
ஏனென்றால் அவர் அனுப்பிய பில்லின் தொகை ரூ. 40 லட்சமாம். இதைப்பார்த்ததும் இவருக்கு ரூம் போட்டு கொடுத்தது ரொம்ப தப்பு என தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம். இதை தான் தற்போது டோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசி வருகிறார்கள்.
கர்ப்பமாக இருக்கும் முல்லைக்கு நடந்த விபத்து.. பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிர்ச்சி ப்ரோமோ

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
