தமிழும் சரஸ்வதியும் சீரியலில் பெரிய ட்விஸ்ட்! தேர்தலில் ஜெயித்தது யார் பாருங்க
தமிழம் சரஸ்வதியும் தொடரில் தற்போது கோதை ஒருபக்கமும், தமிழ் ஒரு பக்கமும் தேர்தலில் மோதுகின்றனர். தமிழை பற்றி ஒரு போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டியதால் அவருக்கு வாக்குகள் கிடைக்காது என அர்ஜுன் மற்றும் கார்த்திக் இருவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
அந்த போஸ்டர் விஷயத்தை பற்றி மறைத்து கோதையை வாக்குப்பதிவு நடைபெறும் இடத்திற்கு கூடி செல்கின்றனர். அங்கே ஏற்கனவே வந்திருந்த தமிழ் மற்றும் சரஸ்வதி தரப்பை சேர்ந்த ஒருவர் கோதையை தடுத்து நிறுத்தி, 'நீங்க இவ்ளோ கீழ்த்தரமாக இறங்குவீங்கனு நினைக்கல' என சொல்லி சண்டைபோடுகிறார்.
ரிசல்ட்
அதன் பின் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. ஆரம்பத்தில் கோதை தான் முன்னணியில் இருக்கிறார். அதனால் பட்டாசு வெடிக்கும் அளவுக்கு அவர்கள் தரப்பு செல்கிறது.
ஆனால் இறுதியில் மொத்தம் பதிவான 250 வாக்குகளில் கோதைக்கு 102 மட்டுமே கிடைத்தது. தமிழ் 148 வாக்குகள் பெற்று வெற்றி பெறுகிறார்.
இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது.
என்னிடம் இருந்து விஜய் தப்பிவிட்டார்.. ஏன் இப்படி சொன்னார் நடிகை லைலா?