தங்க மீன்கள் பட சிறுமி சாதனாவா இது, துபாயில் இப்படியொரு படிப்பு படிக்கிறாரா?- லேட்டஸ்ட் போட்டோ
தங்கமீன்கள் சாதனா
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று இந்த வரிகளை கேட்டவுடனே நம் கண் முன் வந்து நிற்பவர் தங்க மீன்கள் சாதனா.
அப்பா-மகள் பாசத்தை பேசிய இரண்டு படங்களில் நடித்த இவர் தேசிய விருதையும் வாங்கினார். ஆனால் அடுத்தடுத்து படங்கள் நடிக்கவில்லை, இப்போது துபாயில் செட்டிலாகி படிப்பு, நடனம் என கவனம் செலுத்தி வருகிறாராம்.
இடையில் நடனத்திலும் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார் சாதனா.
தற்போதைய விவரம்
நான் மீடியா சார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்து படித்தேன், கூடவே எனக்குப் பிடித்த பரதநாட்டியத்தையும் விடவில்லை. காலோஜ் முடிந்தது, அடுத்து போஸ்ட் கிராஜுவேட்ல ஆக்குபேஷனல் தெரபி என்ற பாடம் எடுத்துப் படிக்கப்போறேன்.
அடுத்த மாசத்துல இருந்து அந்தப் படிப்பு தொடங்க இருக்கு. சிறப்புத் திறன் குழந்தைகளைக் கையாள்வது தொடர்பான பயிற்சி.
தற்போது தனது அம்மா ஒருங்கிணைந்து நடத்தும் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெறுவதற்காக சென்னை வந்துள்ளேன் என பேசியுள்ளார்.
சீரியலில் இருந்து வெளியேறிய எதிர்நீச்சல் புகழ் காயத்ரி கிருஷ்ணனுக்கு பதில் நடிக்கப்போவது இவரா?