தனி ஒருவன் 2 படத்தின் பட்ஜெட் கேட்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்.. இப்படியொரு முடிவு எடுத்துவிட்டார்களா
தனி ஒருவன்
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி 2015ஆம் ஆண்டு வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியடைந்தது என்பதை நாம் அறிவோம்.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதற்கான அறிவிப்பும் மோகன் ராஜாவிடம் இருந்து வெளிவந்தது. ஆனால், படப்பிடிப்பு துவங்கவில்லை.
தனி ஒருவன் 2
கடந்த ஆண்டு ஏ.ஜி.எஸ். நிறுவனமே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. தனி ஒருவன் முதல் பாகத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்த நயன்தாராவும் இப்படத்தில் நடிக்கிறார் என அந்த அறிவிப்பில் தெரிவித்து இருந்தனர்.
அரவிந்த் சாமிக்கு இணையாக யார் இந்த இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க போகிறார் என கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கு பகத் பாசில் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கூறப்பட்டது.
பட்ஜெட்
இந்த நிலையில் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற செப்டம்பர் மாதம் தனிஒருவன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருந்த நிலையில், அதனை இப்போதைக்கு தள்ளி வைத்துள்ளார்களாம் தயாரிப்பு நிறுவனம்.
தனி ஒருவன் 2 படத்திற்காக பட்ஜெட் பைனல் செய்யப்பட்டு தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார் இயக்குனர் மோகன் ராஜா. இப்படத்திற்கு ரூ. 120 கோடி பட்ஜெட் ஆகும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளாராம். ஆனால், தயாரிப்பு நிறுவனம் இவ்வளவு பட்ஜெட் தரமுடியாது, ரூ. 50 கோடியை குறைக்க வேண்டும் என கூறியுள்ளார்களாம்.
அது மிகவும் கடினம் இந்த ரூ. 120 கோடி பட்ஜெட்டில் இருந்து ரூ. 10 கோடி வேண்டும் என்றால் குறைக்கலாம் என இயக்குனர் மோகன் ராஜா கூறியுள்ளார். ஜெயம் ரவிக்கு தற்போதைய நிலைமையில் அவ்வளவு பெரிய மார்க்கெட் இல்லை என்பதால் தான் தயாரிப்பு நிறுவனம் இந்த பட்ஜெட்க்கு சம்மதம் தெரியவில்லையாம். இந்த சூழலில் தான் படத்தை தள்ளிப்போட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் அனைத்தும் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி தனது வலை பேச்சு Youtube பக்கத்தில் கூறியதே. இது சினி உலகம் Website-ன் தனிப்பட்ட கருத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.