வெளிவந்து 8 வருடங்கள் ஆகியுள்ள தனி ஒருவன் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா..

Kathick
in திரைப்படம்Report this article
தனி ஒருவன்
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தனி ஒருவன். ரீமேக் படங்களை மட்டுமே இயக்க தெரியும் என மோகன் ராஜாவை பலரும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தனர்.
அவர்கள் அனைவரின் வாயையும் அடைக்கும் வகையில் தனி ஒருவன் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார். அதன்பின் தமிழில் வெளிவந்த இப்படம் மற்ற மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படம் வெளிவரும் வரை பெரிதளவில் மார்க்கெட் இல்லாமல் இருந்த ஜெயம் ரவி, இப்படத்திற்கு பின் முன்னணி நடிகர் எனும் அந்தஸ்தை பெற்றார். மேலும் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு, இப்படியும் ஒரு வித்தியாசமான வில்லனை உருவாக்கலாம், ஹீரோவிற்கு நிகரான வில்லனை திரைக்கதையில் சுவாரஸ்யமாக எழுதலாம் என மோகன் ராஜா காட்டினார்.
இப்படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன், கணேஷ், நாசர் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் ஹிப் ஹாப் ஆதி இசையில் மிரட்டியிருப்பார். இப்படத்தின் வெற்றிக்கு ஹிப் ஹாப் ஆதியின் இசையும் ஒரு காரணம்.
தனி ஒருவன் வெளிவந்து 3 ஆண்டுகளுக்கு பின் தனி ஒருவன் 2 தயாராகி வருகிறது என அறிவித்தனர். ஆனால், அதன்பின் தனி ஒருவன் 2 குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. சில பேட்டிகளில் தனி ஒருவன் 2 கண்டிப்பாக வரும் என மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி இருவரும் கூறி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் தனி ஒருவன் 2 படத்திற்காக காத்துகொண்டு இருக்கிறார்கள்.
வசூல்
இந்நிலையில், மாபெரும் வெற்றியடைந்த தனி ஒருவன் திரைப்படம் வெளிவந்து 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் தனி ஒருவன் திரைப்படம் ரூ. 68 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன், நெல்சன் என கலந்துகொண்ட நடிகர் கவின்-மோனிகாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி