தனி ஒருவன் படத்தில் முதன் முதலில் ஜெயம் ரவி ஹீரோ இல்லையா.. உண்மையை கூறிய இயக்குனர் மோகன் ராஜா
2015ஆம் ஆண்டு தென்னிந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வந்த இயக்குனர்களில் ஒருவர் மோகன் ராஜா. ஏனென்றால் அதுவரை ரீமேக் படங்களை இயக்கி வந்த இவர் முதல் முறையாக தன்னுடைய சொந்த கதையை படமாக்கினார்.
தனி ஒருவன்
தனி ஒருவன் என்ற தலைப்பில் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றியடைந்தது. உலகளவில் ரூ. 68 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.

ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர். அதை தற்போது அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது. அதற்கான ப்ரோமோ வீடியோ கூட வெளிவந்தது.
முதல் ஹீரோ
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனி ஒருவன் கதையை பிரபாஸ் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று நினைத்து தான் எழுதியதாகவும், அவர் அப்போது காதல் கதைக்களம் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வந்ததால், தன்னுடைய படத்தில் நடிக்க மறுத்ததாகவும் இயக்குனர் மோகன் ராஜா கூறியுள்ளார். அதன்பின் தான் இப்படத்திற்குள் ஜெயம் ரவி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri