விஜய்க்கு தெரியாமல் இயக்குனரான சஞ்சய்.. தந்தை, மகனுக்கு இடையில் பிரச்சனையா
விஜய் - சஞ்சய்
திரையுலகில் செல்வாக்குடன் இருக்கும் நட்சத்திரங்களின் வாரிசு, நடிகராகவோ அல்லது நடிகையாகவோ அறிமுகமாவது வழக்கம் தான். சமீபத்தில் கூட தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படமே லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் என்பது பெரிய விஷயம் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமானது, விஜய்க்கே தெரியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்க்கே தெரியாதா
விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக பிள்ளைகளுடன் லண்டனுக்கு சென்றுவிட்டாராம். அங்கு சஞ்சய்யின் தாத்தா செல்வாக்கு நிறைந்தவர்.

மேலும் லைக்கா சுபாஷ்கரனுடன் நட்பில் இருக்கிறாராம். இதனால், அவர் மூலமாக லைக்காவை தொடர்பு கொண்டு இருக்கலாம் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். அப்படி தான் சஞ்சய் - லைக்கா கூட்டணி அமைந்தது என தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் அறிவிப்பு வெளிவரும் வரை விஜய்க்கு கூட தனது மகன் இயக்குனராக அறிமுகமாக போகிறார் என தெரியாது என்று கூறியுள்ளாராம். தந்தைக்கும் மகனுக்கும் இடையே சில பேச்சுவார்த்தை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் வாழும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி News Lankasri