தி லெஜண்ட் திரைப்படத்தில் எவ்வளவு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என சொன்ன டாப் நடிகை !
தி லெஜண்ட்
தமிழகத்தில் மிகவும் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் அருள் சரவணன். இவர் தற்போது தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.
ஜெ டி ஜெர்ரி இயக்கத்தில் நடிகை ஊர்வசி ராவ்டேலா கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் நேற்று வெளியானது முதல் அனைவரிடமும் சோசமான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
மேலும் தற்போது அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் ஊர்வசி ராவ்டேலா. Miss Diva Universe 2015 பட்டம் பெற்றுள்ள இவர் ஒரு சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக ரூ. 20 கோடி அவருக்கு சம்பளமாக தரப்பட்டுள்ளது.
நிராகரித்த நடிகை
இந்நிலையில் தற்போது இப்படத்தில் அண்ணாச்சியுடன் ஜோடியாக நடிக்க நடிகை நயந்தாராவை கதாநாயகியாக அணுக்கப்பட்டதாகவும், ஆனால் நயன்தாரா இப்படத்தில் நடிக்க மாட்டேன் என சொன்னதாக தகவல் பரவி வருகிறது.
மேலும் எத்தனை கோடி வேண்டுமானாலும் தருகிறோம் என்று கூறியதற்கு எவ்வளவு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்றாராம் நயன்தாரா. இதையடுத்து கடுப்பான லெஜண்ட் சரவணன் பாலிவுட்டில் இருந்து ஊர்வசியை அழைத்து வந்து நடிக்க வைத்தார்.
இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, ஆனால் இப்படியொரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
எழுந்திருக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அஜித்