லெஜண்ட் சரவணன் எடுத்த அதிர்ச்சி முடிவு! ட்ரோல்கள் தான் இதற்கு காரணமா?
லெஜண்ட்
தனது கடையின் விளம்பரங்களில் நடித்து அதிகம் பாப்புலர் ஆன லெஜண்ட் சரவணன் சோலோ ஹரோவாக அறிமுகமான படம் 'தி லெஜண்ட்'. அவரே தயாரித்த அந்த படத்தில் பாலிவுட் ஹீரோயின், ஹரிஷ் ஜெயராஜ் இசை, விவேக் உள்ளிட்ட பல பெரிய நடிகர்கள் இருக்கும் நட்சத்திர பட்டாளம் என வைத்து பிரம்மாண்டமாக படத்தை தயாரித்து இருந்தார்.
ட்ரோல்களால் எடுத்த முடிவு
லெஜண்ட் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன போதே அதிகம் ட்ரோல்களை சந்தித்தது. மேலும் படம் ஓடிடியில் வெளியானால் இன்னும் அதிகம் ட்ரோல்க்ளை சந்திக்கலாம் என்பதால் தற்போது லெஜண்ட் சரவணன் ஒரு அதிரடி முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
லெஜண்ட் படத்தை எந்த ஓடிடி நிறுவனத்திற்கும் விற்பதில்லை என அவர் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.
சன் தொலைக்காட்சியில் முடிவுக்கு வருகிறது பிரபல ஹிட் சீரியல்- ரசிகர்கள் ஷாக்

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
