ராஜா சாப் படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
தி ராஜா சாப்
பான் இந்தியன் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பின் மாபெரும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.
ஆனால், இதற்குப்பின் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரிதும் வெற்றிபெறவில்லை. சலார் படம் மட்டுமே ரசிகர்களால் ஓரளவு கொண்டாடப்பட்டது.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்தான் தி ராஜா சாப். இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவான இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
வசூல்
இந்த நிலையில், ராஜா சாப் படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 160 கோடி வசூல் செய்துள்ளது.
