திருமுருகன் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் செய்தி- வெளிவந்த தகவல்
திருமுருகன்
தமிழ் சினிமா சீரியல் ரசிகர்களுக்கு திருமுருகன் என்றாலே பல தொடர்கள் நியாபகம் வரும்.
மெட்டி ஒலி மூலம் மக்களின் மனதை கவர்ந்த இவர் அடுத்தடுத்து நாதஸ்வரம், தேன் நிலவு, குல தெய்வம், கல்யாண வீடு என பல ஹிட் தொடர்களை இயக்கியுள்ளார், அதில் நடித்தும் இருக்கிறார்.
அதேபோல் எம்டன் மகன் என்ற திரைப்படத்தை இயக்கி அப்படம் மூலமும் ஸ்கோர் செய்துவிட்டார். கடைசியாக இவரது இயக்கத்திலும், நடிப்பிலும் கல்யாண வீடு என்ற தொடர் ஒளிபரப்பாகி வந்தது.
புதிய தொடர்
தற்போது திருமுருகன் தனது அடுத்த தொடருக்கு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் அந்த புதிய தொடரின் புரொமோ விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
காலா பட புகழ் நடிகை ஈஸ்வரியின் கணவர் இவர்தானா?- இத்தனை படங்கள் இயக்கியுள்ளாரா?