பல நாட்களுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் தனுஷின் திரைப்படம் ! அவரே வெளியிட்ட பதிவு..
திருச்சிற்றம்பலம் ரீலிஸ் அறிவிப்பு
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். யாராடி நீ மோகினி, உத்தம புத்திரன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு இந்த கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தி வந்தனர்.
இதற்கிடையே தற்போது இப்படத்தின் ரீலிஸ் தேதியை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இது குறித்த பதிவை வெளியிட்டுள்ள தனுஷ் திரையரங்கில் அனைவரையும் சந்திப்பதாக திருச்சிற்றம்பலம் படத்தின் ரீலிஸ் தேதியை அறிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் உள்ளிட்ட திரைப்படங்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
Well it’s been a while isn’t ? Thiruchitrambalam from august 18th. See you all in theatres. pic.twitter.com/foFZmqronV
— Dhanush (@dhanushkraja) June 15, 2022
செம ஸ்டைலிஷ்ஷாக கோட் சூட்டில் ஏர்போர்ட் வந்த அஜித்- லேட்டஸ்ட் வீடியோ

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
