விஜய், அஜித் திரைப்படங்களை தொடர்ந்து டாப் 5 அதிக வசூலில் தனுஷின் திருச்சிற்றம்பலம்! எங்கு தெரியுமா
திருச்சிற்றம்பலம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான திருச்சிற்றம்பலம் மக்களிடையே பேராதரவை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.
அதன்படி தற்போது வரை திருச்சிற்றம்பலம் உலகளவில் ரூ. 60 கோடியை கடந்து விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் இதை விட அதிக வசூலை குவித்து தனுஷின் திரைபயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாற வாய்ப்பிருக்கிறது.
வசூலில் டாப் 5
இந்நிலையில் தற்போது USA-வில் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதன்படி இந்தாண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்களில் டாப் 5-ல் வந்துள்ளது திருச்சிற்றம்பலம்.
1. விக்ரம்
2. பீஸ்ட்
3. டான்
4. வலிமை
5. திருச்சிற்றம்பலம்
லைகர் திரைவிமர்சனம்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
