திருப்பாச்சி படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் இது தான்.. என்ன தெரியுமா?
திருப்பாச்சி படத்திற்கு முதலில் வேறொரு டைட்டில் வைத்து இருந்ததாக பேரரசு கூறி இருக்கிறார்.
திருப்பாச்சி
விஜய்யின் கெரியரில் ஹிட் படங்களில் ஒன்று திருப்பாச்சி. அதை இயக்கிய பேரரசு தற்போது ஒரு சூப்பரான தகவலை கூறி இருக்கிறார்.
முதலில் அந்த படத்திற்கு அவர் வேறொரு டைட்டில் தான் வைத்து இருந்தாராம். ஆனால் அந்த டைட்டில் கிடைக்காததால் தான் திருப்பாச்சி என பெயர் மாற்றம் செய்ததாக அவர் கூறி இருக்கிறார்.
டைட்டில் இதுதான்
முதலில் அந்த படத்திற்காக மொத்தம் 150 டைட்டில்களை எழுதினாராம். அதில் இருந்து கிரிவலம் என்கிற டைட்டிலை தேர்வு செய்தார்களாம். அது விஜய்க்கும் அதிகம் பிடித்து போன நிலையில், வேறொரு இயக்குனார் அந்த டைட்டிலை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கிறார்.
பணம் கொடுத்து அந்த டைட்டிலை வாங்க முயற்சித்தும் பலனில்லை, அதனால் அதற்கு பிறகு திருப்பாச்சி என்கிற பெயரை தேர்வு செய்தோம் என பேரரசு தெரிவித்து இருக்கிறார்.
திருமணம் குறித்து முதல் முறையாக அறிவித்த விஜய் டிவி புகழ்.. காதல் ஜோடி வெளியிட்ட புகைப்படம்