அஜித்தின் வலிமை பட பாக்ஸ் ஆபிஸ் குறித்து திருப்பூர் சுப்ரமணியம் கூறிய தகவல்- படு மகிழ்ச்சியில் ரசிகர்கள்
பல நாள் காத்திருப்புக்கு கிடைத்த வரப்பிரசாதம் போல் ரிலீஸ் ஆனது தான் அஜித்தின் வலிமை. கிட்டத்தட்ட அஜித்தை திரையில் காண 2 வருடங்கள் காத்திருந்தார்கள் ரசிகர்கள்.
படத்தின் வசூல்
படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது. அதிலும் அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் படத்தில் இருந்த எல்லா விஷயத்தையும் தாண்டி ஹைலைட்டாக அமைந்துவிட்டது.
தமிழகத்தில் ரூ. 130 கோடிக்கு மேல் வசூலித்துள்ள படம் உலகம் முழுவதும் ரூ. 200 கோடியை தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

திருப்பூர் சுப்ரமணியன்
படங்களின் வசூல் விவரங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வரும், மக்கள் அந்த விவரங்களை பார்த்து கொண்டாடி வரும் வேலையில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம் ஒரு விவரம் கூறுவார்.
பாதி நேரம் அவர் சொல்லக் கூடிய வசூல் விவரங்கள் சமூக வலைதளங்களில் சுற்றும் வசூல் விவரங்களுக்கு இணையாக இருக்கும். தற்போது அஜித்தின் வலிமை படம் குறித்தும் அவர் கூறியுள்ளார்.
அஜித்தின் திரைப்பயணத்திலேயே வலிமை படம் தான் அதிகம் வசூல் செய்துள்ள படம் என தெரிவித்திருக்கிறார்.

பொது மக்களால் திடீரென தாக்கப்பட்ட ரோஜா சீரியல் நாயகன் அர்ஜுன்- பரபரப்பு தகவல்
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu