எதிர்நீச்சல் சீரியல் முடியப்போகிறதா?- கிளைமேக்ஸ் குறித்து கூறிய இயக்குனர்
எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் இப்போது தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் பேசப்படும் ஒரு தொடர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி ஆகியோர் படித்திருந்தாலும் குடும்பத்தில் இருக்கும் ஆண்களின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து விட்டு தங்களின் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக படும் போராட்டத்தை இந்த தொடர் தினமும் காட்டி வருகிறது.
இந்த தொடர் தற்போது 300 எபிசோடுகளை எட்டிவிட்டது, விறுவிறுப்பின் உச்சமாக மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
கிளைமேக்ஸ் காட்சி
தொடர் நன்றாக ஓடிக் கொண்டிருக்க தொடரின் கிளைமேக்ஸ் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் இயக்குனர் திருச்செல்வம்.
அவர் அந்த பேட்டியில், இந்த சீரியலில் சுவாரசியம் குறைந்துவிட்டது என்று எப்போது ரசிகர்களுக்கு தோன்றுகிறதோ அப்போது தான் அதற்கான முடிவு தெரியும். அதுவரை இந்த சீரியலில் இருக்கும் பெண்கள் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டே இருப்பார்கள் என்று திருச்செல்வம் கூறியுள்ளார்.
சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி குருபிரசாத் வாங்கிய முதல் புதிய கார்- அவரே வெளியிட்ட போட்டோ