தலைவர் 170-ல் நடிக்கவுள்ள முக்கிய நடிகர் குறித்து இப்போதே வெளியான தகவல்! யார் தெரியுமா?
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

தலைவர் 170
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அவரின் 170-வது திரைப்படத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவின. ஆனால் அது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வரை வரவில்லை.
இதற்கிடையே பிரபல நடிகர் அரவிந்த் சாமி சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டியில் தலைவர் 170-ல் அவர் நடிக்கிறாரா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் மறைமுகமாக பதிலளித்து இருக்கிறார். இதனால் தற்போது அவரும் அப்படத்தில் நடிக்கலாம் என தகவல் வருகின்றன.

வெந்து தணிந்தது காடு திரைவிமர்சனம்
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri