பிக்பாஸ் சீசன் 6 குறித்த ஸ்பேஷல் விஷயம்! இப்படி நடக்கயிருப்பது இதுவே முதல்முறை
பிக்பாஸ்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம்தோடறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.
கடந்த ஐந்து சீசன்களின் வெற்றியை தொடர்ந்து ஆறாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது.
அதன்படி ஏற்கனவே கமல் நடிப்பில் புதிய ப்ரோமோக்கள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட விக்ரம் பாணியில் கமல் வசனம் பேசியிருந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
முதல்முறையாக நடக்கும் விஷயம்
இதற்கிடையே தற்போது இந்த சீசனுக்கான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுக் கட்டத்தை எட்டிவிட்டதாகச் சொல்கிறார்கள். மேலும் இந்த சீசனில் ஒன்று அல்லது இரண்டு இடங்களுக்கு மக்களிலிருந்து போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதுமட்டுமின்றி முதல்முறையாக பிக்பாஸ் சீசன் 6 ஒரே நேரத்தில் டிவியிலும், OTT-யிலும் ஒளிப்பரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி வழக்கம்போல 9.30 மணிக்கும் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிப்பரப்பாக உள்ளது.
அஜித்திற்கே டப் கொடுக்கும் நடிகர் சூர்யா ! விலையுர்ந்த சொகுசு பைக் உடன் அவர் கொடுத்த போஸ்