பாகுபலி, கே.ஜி.எஃப் படங்களை அடித்துநொருக்க வரும் தமிழ் திரைப்படம்.. டீசர் ரெடி
கே.ஜி.எஃப் - பாகுபலி
இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொட்ட திரைப்படங்களின் வரிசையில் பாகுபலி மற்றும் கே.ஜி.எஃப் கண்டிப்பாக இடம்பெறும். இந்த இரு திரைப்படங்களும் வசூலில் மாபெரும் சாதனை படைத்தவை.
இந்த இரு திரைப்படங்களின் அளவிற்கு தமிழில் இதுவரை எந்த ஒரு படமும் வரவில்லையே என்று ரசிகர்களுக்கு ஏக்கம் இருந்துகொண்டே தான் இருக்கிறது.
பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றி என்றாலும் கூட சிறிதாக ஒரு தவிப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
பதில் இப்படம் தான்
இந்நிலையில், பாகுபலி, கே.ஜி.எஃப் இரு திரைப்படங்களை தூக்கி சாப்பிடும் அளவிற்கு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் தான் சூர்யா 42.
[V2KOC ]
இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாகுபலி, கே.ஜி.எஃப் என திரைப்படங்களுக்கு பதில் சொல்லும் விதமாக சூர்யா 42 திரைப்படம் இருக்கும். படத்தின் டீசர் வருகிற மே மாதம் வெளியாகிறது என்று கூறியுள்ளார்.
இதன்முலம் சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
150 கோடியில் தனுஷ் கட்டிய பிரம்மாண்ட வீடு.. வெளிந்த வீட்டின் உள்புற புகைப்படங்கள்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
