பிக் பாஸ் 7ல் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக் பாஸ் 7
விஜய் டிவியின் பிக் பாஸ் 7ல் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். அனன்யா மக்களிடம் இருந்து குறைவான வாக்குகள் பெற்றதன் காரணமாக முதல் வாரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
அதை தொடர்ந்து அடுத்த வாரம் ஆரம்பத்தில் 'என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை' என கூறி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தானே முன் வந்து வெளியேறினார் பவா செல்லத்துரை. இதனால் கடந்த வாரம் நோ எலிமினேஷன் என அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இந்த வாரம் நிக்சன், அக்ஷயா, மணி சந்திரா, விசித்ரா, ஐஸு, விஜய் வர்மா, ப்ரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, விணுஷா, மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.
இந்த வாரம் எலிமினேஷன்
இந்நிலையில், விணுஷா தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான விணுஷா தன்னை மக்கள் மத்தியில் இன்னும் பிரபலப்படுத்துக்கொள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார்.
ஆனால், தற்போது மூன்றாவது வாரமே அவர் எலிமினேட் ஆகப்போகிறாரா என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் வார இறுதியில் என்ன நடக்க போகிறது என்று. ஏனென்றால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதே பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகும்.