Sensational போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றம்- ரசிகர்கள் ஷாக்
பிக்பாஸ் 6
பிக்பாஸ் 6வது சீசன் விறுவிறுப்பின் உச்சக்கட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் இருந்தார்கள், இப்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.
இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடம் இருந்தது. காரணம் நிகழ்ச்சியில் விறுவிறுப்பை ஏற்றும் போட்டியாளர்களும் உள்ளார்கள், எனவே யார் அதிக ஓட்டுகள் பெற்று உள்ளே இருக்கப்போகிறார், குறைவான வாக்கு பெற்று வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் குழம்பி வந்தார்கள்.
சனிக்கிழமை நிகழ்ச்சியில் படப்பிடிப்பு இன்று நடந்துள்ளது, அதைப்பற்றி ஒரு விஷயம் வெளியாகியுள்ளது.
எலிமினேட் ஆன பிரபலம்
அதாவது பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது தனலட்சுமி தானாம், இது உறுதியான தகவல். ரசிகர்கள் இவர் வீட்டைவிட்டு வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவே இல்லை என்பது தான் உண்மை.
பார்த்திபனை விவாகரத்து செய்த நடிகை சீதாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா?