OTT தளத்தில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர் என்னென்ன? லிஸ்ட் இதோ
எப்படி ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அது போன்று ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில், இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.
போலீஸ் போலீஸ்:
நடிகர் மிர்ச்சி செந்தில், சுஜிதா தனுஷ், ஜெயசீலன் தங்கவேல், ஷபானா ஷாஜகான், சத்யா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்த தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.
ஹவுஸ் மேட்ஸ்:
டி. ராஜவேல் இயக்கத்தில் நடிகர் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் நாளை ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது.
இந்திரா:
சபரீஷ் நந்தா இயக்கத்தில் வெளியான இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் மற்றும் Tentkotta OTT தளத்தில் வெளியாக உள்ளது.

காலில் விழுந்த பின் கர்ச்சீப் எதற்கு? இபிஎஸ்ஸை சாடிய ஸ்டாலின் - டெல்லியில் என்ன நடந்தது? IBC Tamilnadu
