இந்த வாரம் விஜய் டிவியில் சண்டே ஸ்பெஷலாக ஒளிபரப்பாகும் தொடர் எது தெரியுமா?... இதோ விவரம்
சண்டே ஸ்பெஷல்
தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் டிஆர்பிக்காக ஏதாவது ஸ்பெஷல் விஷயங்கள் நடக்கிறது.
சன் டிவியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்று முடிச்சு மற்றும் மருமகள் தொடர்களின் மகா சங்கமம் நடந்தது, அப்போது டிஆர்பியும் மிகவும் அதிகரித்தது. அதேபோல் ஜீ தமிழ் எடுத்துக் கொண்டால் சில தொடர்களை 45 நிமிடம் ஒளிபரப்பு செய்து வந்தனர்.
விஜய் டிவி எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு சீரியலை 1.30 மணி நேரம் ஸ்பெஷலாக ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.
எந்த தொடர்
ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக தொடர்களை ஒளிபரப்பு செய்ய தொடங்கியதில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி, சின்ன மருமகள் போன்ற சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தது.
தற்போது இந்த வாரம் சிந்து பைரவி சீரியல் ஞாயிறு மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாம்.