நாளை திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

Report

This week theatre release movies: ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு திரையுலகில் இருந்து வித்தியாசமான கதைக்களத்தில் திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில், இந்த வாரம் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல்

ஓம்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஓம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கண்டிப்பாக இது தனுஷின் கம்பேக் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | This Week Theatre Release Movies

சத்தியவான் சாவித்திரி

நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சத்யவான் சாவித்திரி திரைப்படம் நாளை (நவம்பர் 20) தேதி வெளியாகிறது. இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நாளை திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | This Week Theatre Release Movies

அப்பாக்குட்டி

வித்தியாசமான கதைக்களத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். அப்படி, இவர் நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் திரைப்படம்தான் அப்பாக்குட்டி. அப்பா - மகள் பாசத்தை பேசும் இப்படத்தை மு. மாறன் இயக்கியுள்ளார். நடிகை ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நாளை திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | This Week Theatre Release Movies

AOT (ஆகாசத்தில் ஒரு நாள்)

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் நடிப்பில் நாளை வெளியாகிறது AOT. தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தமிழில் ஆகாசத்தில் ஒரு நாள் என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் சாத்விகா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

நாளை திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | This Week Theatre Release Movies

Godzilla Minus Zero

ராமாயணா திரைப்படத்தின் வெளியீடு காரணமாக, கடந்த நவம்பர் 6-ஆம் தேதி இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் Godzilla Minus Zero திரைப்படம் வெளியானது. இப்படத்தை எப்போது திரையில் காணப்போம் என இந்திய சினிமா ரசிகர்கள் காத்திருந்த நிலையில், நாளை இப்படம் இந்தியாவில் வெளியாகிறது.

நாளை திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | This Week Theatre Release Movies

இவை தவிர்த்து, Bachelor Party D'eux, Party Animals, The Hunger Games: Sunrise on the Reaping, Ebenezer: A Christmas Carol போன்ற திரைப்படங்களும் இந்த வாரம் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US