2024: திருமணம் செய்து கொண்ட திரையுலக பிரபலங்கள் யார் தெரியுமா.. லிஸ்ட் இதோ
இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் முதல் சித்தார்த் வரை பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் திருமணம் என்ற ஒரு புனிதமான பந்தத்தில் இணைந்துள்ளனர். அந்த வகையில், இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட சினிமா நட்சத்திரங்கள் குறித்து கீழே காணலாம்.
நாக சைதன்யா:
நாக சைதன்யா, நடிகை சமந்தாவிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த பின் சோபிதா துலிபாலாவை கடந்த டிசம்பர் 4 - ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் மறுமணம் செய்து கொண்டார்.
கீர்த்தி சுரேஷ்:
தமிழ், தெலுங்கு என்று முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி அவருடைய 15 வருட காதலனான ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் 12 - ம் தேதி கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
சித்தார்த்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சித்தார்த் இரண்டாவதாக நடிகை அதிதி ராவை குடும்ப வழக்கப்படி ஒரு பாரம்பரிய கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
வரலட்சுமி சரத்குமார்:
நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி தன்னுடைய நீண்ட நாள் நண்பரான நிக்கோலாய் சர்ச் தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மேகா ஆகாஷ்:
இளம் நடிகையான மேகா ஆகாஷ் அரசியல் வாரிசான விஷ்ணு என்பவரை கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
காளிதாஸ்:
மலையாள நடிகர் ஜெயராமின் மகனும், நடிகருமான காளிதாஸ், தாரணி காளிங்கராயர் என்பவரை டிசம்பர் 8-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
