55 வயது நடிகையுடன் காதலா? - விளக்கம் கொடுத்த நடிகர்

By Kathick Jun 14, 2023 12:30 PM GMT
Report

துளசி

"சகலகலா வல்லவன்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை துளசி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

55 வயது நடிகையுடன் காதலா? - விளக்கம் கொடுத்த நடிகர் | Thulasi Prabhas Sreenu Love Controversy

கன்னட இயக்குனர் சிவமணியை நடிகை துளசி திருமணம் செய்தார். தமிழில் ஹீரோயினாக அறிமுகமான இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் இல்லாத சூழலில் நிகழ்ச்சி ஒன்றை பிரபாஸ் ஸ்ரீனுவுடன் இணைந்து நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஒரு ஆண்டை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

விளக்கம் கொடுத்த நடிகர்

இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் துளசி பிரபாஸ் ஸ்ரீனுவை அன்போடு டார்லிங் என அழைப்பார். அதை வைத்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக கதை கட்டி விட்டனர். இதற்கு பிரபாஸ் ஸ்ரீனு பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்து பேசியுள்ளார்.

அதில், 'வயது வித்தியாசம் பார்க்காமல் எப்படி இவ்வாறு வதந்திகளை பரப்புகிறார்கள் என தெரியவில்லை. துளசி எனக்கு அம்மா போன்றவர். அவர் படப்பிடிப்புத்தளத்தில் என்னிடம் அக்கறையாக நடந்து கொள்வார்'.

55 வயது நடிகையுடன் காதலா? - விளக்கம் கொடுத்த நடிகர் | Thulasi Prabhas Sreenu Love Controversy

'எங்களுக்குள் உள்ள உறவு அம்மா மகனுக்கு இடையே உள்ள உறவு என்றார். மேலும், இதை பற்றி என் மனைவியிடம் நான் சொன்னபோது சிரித்தார். அவர் மிகவும் பக்குவமானவர். இதுபோன்ற வதந்திகளை அவர் காதில் வாங்க மாட்டார்' என நடிகர் விளக்கம் கொடுத்துள்ளார். இதன்மூலம் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

நடிகை வரலட்சுமி சரத்குமார் Teenage வயதில் எப்படி உள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US