துள்ளாத மனமும் துள்ளும் பட உருவான விதம் இதுதான்.. விஜய்யால் மறக்கமுடியாத மாபெரும் வெற்றி
துள்ளாத மனமும் துள்ளம்
எழில் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளம். இப்படம் விஜய்யின் திரை வாழ்க்கையில் அதுவரை கண்டிராத மாபெரும் வெற்றியை தேடி தந்தது.
ஆனால், இப்படம் எப்படி விஜய்க்கு தேடி வந்தது என்பது குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
உருவான விதம்
இப்படத்தின் கதையை வைத்துக்கொண்டு இயக்குனர் எழில் பல தயாரிப்பாளர்களிடம் சென்றுள்ளார். ஆனால், படத்தின் கதாநாயகியாக கண்ணு தெரியாமல் நடிப்பார் என்று கூறியவுடன் தயாரிப்பாளர் நோ சொல்லி விடுகிறார்கள்.
இந்த சமயத்தில் நடிகர் வடிவேலுவை சந்தித்து இந்த படத்தின் கதையை பேச்சு வாழ்க்கையில் கூறியுள்ளார். கதையை கேட்டு முடித்தபின் கண்ணீர்விட்டு அழுதுவிட்டாராம் வடிவேலு. இதன்பின் இயக்குனர் எழிலை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஒவ்வொரு தயாரிப்பாளரின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார் வடிவேலு.
இந்த முறை கதை நன்றாக இருக்கிறது என்று கூறும் தயாரிப்பாளர்கள் ஹீரோ வடிவேலு என்று கூறியவுடன் நோ சொல்லி விடுகின்றனர். தொடர்ந்து பல முறை இப்படி நடந்ததால், வடிவேலுவும் ஒரு கட்டத்தில் இதிலிருந்து வெளியேறிவிடுகிறார்.
இதன்பின் மீண்டும் தன்னுடைய முயற்சியை கைவிடாத எழில், இதன்பின் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரியை அவருடைய தயாரிப்பு அலுவலகத்திற்கு சென்று சந்தித்து இப்படத்தின் கதையை இயக்குனர் எழில் கூறியுள்ளார்.
கதையை கேட்டு முடித்தபின் இப்படத்தின் ஹீரோ யார் என்று ஆர்.பி. சௌத்ரி கேட்டுள்ளார். நடிகர் முரளி நடித்தால் நன்றாக இருக்கும் என எழில் கூறியுள்ளார். இதற்க்கு ஆர்.பி. சௌத்ரி முரளி தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதனால் அவர் இப்படத்தில் நடிப்பது கடினம். நடிகர் விஜய்யிடம் சென்று இப்படத்தின் கதையை கூறு என ஆர்.பி. சௌத்ரி இயக்குனர் எழிலிடம் கூறியுள்ளார். இதன்பின் விஜய்யின் வீட்டிற்கு சென்று துள்ளாத மனமும் துள்ளம் படத்தின் கதையை எழில் கூறினார்.
கதையை கேட்டு முடித்த விஜய் எனக்கு ஒரு நாள் டைம் கொடுங்க என்று எழிலிடம் கேட்டுள்ளார். ஒரு நாள் கழித்து தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மற்றும் இயக்குனர் எழில் விஜய் வீட்டிற்கு சென்றுள்ளனர். முதலில் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆர்.பி. சௌத்ரியை பார்த்துவிட்டு 'என்ன விஷயம் நீங்களே வந்துருக்கீங்க' என்று கேட்டுள்ளார்.
இதன்பின் அங்கு வந்த விஜய் கதை சூப்பர் நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். ஹீரோ ஓகே சொன்னபின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நடிகர், நடிகைகளை கமிட் செய்து படப்பிடிப்பு நடந்துள்ளது.
1999ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியை விஜய்க்கு கொடுத்தது. இப்படத்தின் மூலம் தான் விஜய்க்கு கேரளாவில் மிகப்பெரிய மார்க்கெட் ஓபன் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே துள்ளாத மனமும் துள்ளும் படம் உருவான கதை..
பிரபல தயாரிப்பாளர் வீட்டின் வாசலில் மனைவி ஷாலினியுடன் நின்ற அஜித்.. காரணம் என்ன