கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய் காலமானார்..
நடிகர் அபிநய்
2002ஆம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் அபிநய். அதன்பின், ஜங்ஷன், சிங்கார சென்னை, சக்சஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

43 வயதான அபிநய்க்கு, கல்லீரல் தொற்று பிரச்சனை ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உயிரை காப்பாற்ற ரூ. 28 லட்சம் தேவைப்படுவதாக தகவல் வெளிவந்த நிலையில், KPY பாலா, நடிகர் தனுஷ் போன்றவர்கள் உதவி செய்தனர். இதன்பின் ஓரிரு சினிமா நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொண்டார்.
அபிநய் காலமானார்
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 4 மணியளவில் அவர் காலமானார். நடிகர் அபிநய்க்கு உறவினர்கள் என பெரிதாக யாரும் இல்லை என கூறப்படுகிறது. ஓரிரு நண்பர்கள் மட்டுமே அவருக்கு உதவியுள்ளனர். தற்போது அபிநய்யின் இறுதி சடங்கு செய்வதற்கு கூட யாரும் இல்லாமல் இருக்கிறது என தகவல் தெரிவிக்கின்றனர்.
