நீங்க படத்தில் வந்ததே 2 நிமிஷம் தான்.. அமீர், பாவனி ட்ரோல்களுக்கு கொடுத்த பதிலடி
அமீர், பாவனி
பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளர்களகா கலந்து கொண்ட அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் காதலிக்க தொடங்கி அதை வெளிப்படையாக அறிவித்துவிட்டனர். அவர்கள் அதற்கு பிறகு ஜோடியாக பாடல் ஒன்றில் தோன்றி இருந்தனர்.
அதன் பின் அஜித்தின் துணிவு படத்தில் இருவரும் நடித்து இருந்தனர். இருப்பினும் அவர்களுக்கு படத்தில் பெரிய ரோல் எதுவும் இல்லை. 'நீங்க படத்தில் வந்ததே ரெண்டு நிமிஷம் தான். எதுக்கு ஓவர் பில்டப்' என அவர்கள் இருவரையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.
பதிலடி
தற்போது ட்ரோல்களுக்கு ஆமீர் மற்றும் பாவனி இருவரும் பதிலடி கொடுத்து இருக்கின்றனர். "அஜித் சார் படம் என்பதால் கால் வந்ததும் ஒப்புக்கொண்டோம். என்ன ரோல், படத்தின் கதை என்ன என்று கூட கேட்கவில்லை."
"படத்தில் எவ்வளவு நேரம் வந்தோம் என்பதை விட, ஷூட்டிங்கில் அஜித் சார் எங்களை அழைத்து ஒரு மூன்று மணி நேரம் அட்வைஸ் கொடுத்தது தான் பெரிய விஷயமாக நினைக்கிறோம்" என கூறி இருக்கின்றனர்.
காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது எப்படி, நடிகை ஆல்யா மானசாவே வெளியிட்ட வீடியோ- வருந்தும் ரசிகர்கள்

விஜய் கட்சியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு வந்தது; ஆனால்.. - திருமாவளவன் பரபரப்பு பேச்சு IBC Tamilnadu
