வாரிசு படத்துடன் துணிவு மோதுவது உறுதியா? அஜித் ரசிகர்களிடையே பரவி வரும் தகவல்
துணிவு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் அதிகாரபூர்வ போஸ்டர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

ரிலீஸ் தேதி
இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த வகையில் தற்போது துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
ஆம், திரைப்படங்கள் குறித்த பிரபல இணையத்தளம் ஒன்றில் தான் துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது ரசிகர்கள் வாரிசு திரைப்படம் துணிவு திரைப்படமும் வெளியாகும் என சொல்லி வருகின்றனர்.
#IMDB confirms the #Thunivu tentative release date 12, 2022 however we are waiting for official date declaration.#AjithKumar #ThunivuPongal pic.twitter.com/AIVA9v7EYN
— Prakash (@prakashpins) October 6, 2022
பிக் பாஸ் 5 நமிதாவை போலவே பிக் பாஸ் 6-ழும் ஒரு திருநங்கை.